Posts

உன் காதல் வேண்டும் .....!

உன் காதல் வேண்டும் .....! கனவிலும் ......... நினைவாலும் ...... கொல்வது  போதாதென்று ...... மௌனத்தாலும் ...... கொல்கிறாய் .......... தயவு செய்து நிஜமாய்...... கொண்றுவிடு .........! என் குறைந்த பட்ச.... கோரிக்கை நீ வேண்டும் ..... அதிக  பட்சகோரிக்கை ..... நீயே  வேண்டும் ........ முடியாதுபோனால் ........ உன் காதல் வேண்டும் .....! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்  

உன் அழைப்புக்காய்.....!

உன் அழைப்புக்காய்.....! நீ.... காதலை.... மறுத்த அந்த நொடி..... இதயம் கல்லறை...... சென்றுவிட்டது.....! மூச்சு மட்டும்....... பேச்சுக்காக இயங்குது..... தோற்றுப்போனாலும்..... தேடிக்கொண்டிருக்கிறேன்..... உன் அழைப்புக்காய்.....! எனக்காக ஒருமுறை.... வந்துவிட்டு போ...... இல்லை வந்து என்னை..... கொண்றுவிட்டு போ....! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

இனிய தீபதிருநாளின்

இனிய தீபதிருநாளின் தீப திரு நாளில்...... தீய எண்ணத்த எரித்துவிடு..... தீய செயலை தூக்கியெறி...... தீய பார்வையை மறைத்துவிடு..... தீய பேச்சை துப்பியெறி...... தீய தொழிலை செய்யாதே......! தீங்கு செய்வாரோடு சேராதே...... தீச்சொல் கூறி திரியாதே....... தீயவை எல்லாம் ஒழித்துவிடு....... தீப காந்திகல்போல் வாழ்........ தீம் சொல்லால் பேசு.......... தீரம் கொண்டசெயல் செய்..... தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்.....! & இனிய இனிப்பான இனிய தீபதிருநாளின் இனியவனின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள் -------------------------- பணம் கருகிக்கிடக்கிறது பட்டாசு @@@ சந்தோசப்படுத்தி சந்ததியை அழிக்கிறது பட்டாசு @@@ எங்களிலும் பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள் வெடிக்காத பட்டாசு @@@ ஒவ்வொரு வீடும் ஏவுகணை மையமாகிறது ஈக்குபட்டாசு @@@ மனதுக்குள் பலவர்ணங்களுடன் வெடிக்கிறது ஏழைவீட்டில் பட்டாசு & கவிப்புயல் இனியவன்

தொட்டி மீன்

செயற்கை சுவாசத்தில் வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது தொட்டி மீன் @@@ ஏழை கொடுத்த மனு வரிசைப்படுத்தியிருக்கிறது சவரக்கடை @@@ நன்னீர் விஷக்கிருமியாகியது டெங்கு @@@ அறுவடை செழித்தும் வாழ்க்கை செழிக்கவில்லை விவசாயக்கடன் @@@ காட்டுக்கு ராஜா என்ன தவறு செய்தாரோ மிருக்ககாட்சி கூடத்தில் சிறை @@@ கவிப்புயல் இனியவன்